search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக-வில் இணைந்த சப்யாசச்சி தத்தா
    X
    பாஜக-வில் இணைந்த சப்யாசச்சி தத்தா

    திரிணாமூல் காங்கிரசில் இருந்து மேலுமொரு எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு தாவல்

    மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சப்யாசச்சி தத்தா உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையில், திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் சப்யாசச்சி தத்தா. ராஜார்ஹர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் கடந்த சில மாதங்களாக கட்சி செயல்பாடுகளை விட்டு சற்று விலகியே இருந்தார். 

    இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று கொல்கத்தா வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சப்யாசச்சி தத்தா உள்துறை மந்திரி அமித் ஷா  முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.

    மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட சபியாசாச்சி தத்தா பாஜக-வில் இணைந்தது திரிணாமூல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
    Next Story
    ×