search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம்
    X
    சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம்

    பாட்னாவில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய கிராம மக்கள்- காரணம் என்ன?

    பீகார் மாநிலம் பாட்னாவில் ஆசிரியர் ஒருவரை கிராம மக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
    பாலிவுட் நடிகர் அஜாஸ் கான், தனது டுவிட்டர் பக்கத்தில் இரத்த காயங்களுடன் இருக்கும் வாலிபர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு, இவர் பெயர் அபு காமில், ஆசிரியராக பணியாற்றும் இவர் ஒரு முஸ்லீம் என்பதால் சிலர் இவரை தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டிருந்த பிரசாந்த் பட்டேல், அஜாஸ் கான் போலியான தகவலை பரப்புகிறார். 

    அந்த புகைப்படத்தில் உள்ள வாலிபர் ஒரு பெண்ணை கற்பழித்ததால் தான் தாக்கப்பட்டதாக பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீ டுவிட் செய்திருந்தனர். டுவிட்டரில் வைரலாக பரவிய இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது போலி என கண்டறியப்பட்டுள்ளது.

    வைரலாகும் டுவிட்டர் பதிவு

    உண்மையில் நடந்தது என்னவென்றால், பாட்னாவில் பயிற்சி மையம் நடத்தி வரும் அபு காமில் என்பவர் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி ஹஜிபூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த கொள்ளை கும்பல் அவரை கடத்தி சென்றது. இதையடுத்து அவரை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்த கொள்ளை கும்பல், ஓடும் காரில் இருந்து அபு காமிலை தள்ளிவிட்டுள்ளனர். காயங்களுடன் வலியால் துடித்த அபு காமிலை பார்த்த கிராம மக்கள், அவரை திருடன் என எண்ணி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

    இதன்மூலம் டுவிட்டரில் பரவிய செய்தி போலி என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. இதுபோன்று வைரலாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும். 
    Next Story
    ×