search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை கூட்டத்தில் மோடி, அமித் ஷா
    X
    ஆலோசனை கூட்டத்தில் மோடி, அமித் ஷா

    மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் - பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது

    டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பிறமாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    மோடியை வரவேற்கும் ஜே.பி.நட்டா

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று ஆலோசித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வாக்குறுதிகள் பற்றி எல்லாம் விவாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

    முன்னதாக இந்த கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் வரவேற்று கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    Next Story
    ×