search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
    X
    இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

    கர்நாடகா இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம்

    கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    உச்ச நீதிமன்றம்

    இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டது.

    அதைத்தொடர்ந்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

    இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
    Next Story
    ×