search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)
    X
    காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

    ஜம்மு-காஷ்மீரில் சுதந்திரம் இல்லை: குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு

    ஜம்மு-காஷ்மீரில் மக்களுக்கு சுதந்திரம் இல்லை, அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கியது. இதையடுத்து அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரை பார்வையிட தன்னை அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

    இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு குலாம்நபி ஆசாத் ஆறு நாட்கள் வரை ஜம்மு-காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள கடந்த 16-ம் தேதி அனுமதியளித்தது. மேலும், ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இதையடுத்து, குலாம்நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) முதல் ஜம்மு-காஷ்மீரில் பயணம் மேற்கொண்டார். தனது ஆறு நாட்கள் பயணத்தை இன்று முடித்து கொண்டு டெல்லி திரும்பும் வழியில் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் ஆளும் கட்சியை சேர்ந்த 100 முதல் 200 நபர்களை தவிர காஷ்மீர் மக்களிடையே மிகுந்த ஏமாற்றம் நிலவுகிறது. அது மெல்ல ஜம்மு பகுதியிலும் பரவியுள்ளது.

    காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நான் இதுபோன்ற பயங்கர நிர்வாகதை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இங்கு சுதந்திரமே இல்லை. மக்கள் பேசவே பயப்படுகிறார்கள். ஒருவேளை எதாவது பேசினால் அரசு தங்களை குறிவைத்துவிடும் என அஞ்சுகிறார்கள். மக்களின் குரல் நசுக்கப்படுவது மட்டுமல்லாமல் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்பட ஜனநாயக உரிமைக்கு இடமே இல்லாத பகுதியாக காஷ்மீர் விளங்குகிறது.

    குலாம்நபி ஆசாத்

    மக்கள் யாராவது குடிநீர், மின்சாரம் வசதிகள் அன்றாட தேவைகள் தொடர்பாக ஏதேனும் போராட்டம் நடத்த வேண்டும் என பேசினால் கூட நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த சிறைக்கு செல்லவேண்டும் என கேட்கிறார்கள்.

    நான் காஷ்மீரில் நான்கு நாட்கள் தங்கியிருந்தாலும் எனது திட்டத்தின் 10 சதவீகித பகுதிகளை கூட பார்வையிட அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. 

    இவ்வாறு அவர் கூறினார்.  
    Next Story
    ×