search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
    X
    நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

    டெல்லியில் இவ்வளவு நீண்ட வரிசை காத்திருப்பது எதற்காக?

    மத்திய அரசின் விற்பனை வாகனத்தில் மலிவு விலையில் விற்கப்படும் சமையலுக்கு தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான ‘அதை’ வாங்கிச் செல்ல டெல்லி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மராட்டியம், ஆந்திரா, குஜராத், கிழக்கு  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபநாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் வெங்காயம் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. இதனால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நாட்டின் தற்போதைய வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு தொடரும் என வேளாண் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்தியர்கள் வீட்டு சமையல் அறையில் பிரதான இடம் பிடித்துள்ள வெங்காயத்தின் விலை இன்னும் சில நாட்களில் நூறு ரூபாயை தொடக்கூடும் என ஏழை, எளிய மக்கள் கவலைப்பட தொடங்கியுள்ளனர்.

    இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வெங்காயத்தை வாங்கி செல்லும் பெண்.

    மத்திய அரசின் தொகுப்பில் இருந்த 56 ஆயிரம் டன் வெங்காயத்தில் 16 ஆயிரம் டன் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் ‘நாஃபெட்’ கூட்டுறவு அங்காடிகள் மூலம் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து அனுப்பப்படும் வெங்காயம் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பிறபகுதிகளில் ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் அளிக்கப்படுகிறது.

    இதற்காக தினந்தோறும் சுமார் 200 டன் வெங்காயம் மத்திய தொகுப்பில் இருந்து டெல்லிக்கு அளிக்கப்படுகிறது. உள்ளூர் சந்தை விலை 70-80 ரூபாயாக உள்ள நிலையில் ‘நாஃபெட்’ கூட்டுறவு அங்காடி வாகனங்கள் டெல்லியின் முக்கிய சாலைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யும் வெங்காயத்தை வாங்குவதற்காக மக்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.
    Next Story
    ×