search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் டிரைவர்
    X
    பஸ் டிரைவர்

    ஹெல்மெட் அணியாததால் அபராதம் - அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்

    நொய்டாவில் ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறையின் செயலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தின் நொய்டா நகரை சேர்ந்தவர் நிரன்கர் சிங். இவர் அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இவரது நிறுவனத்துக்கு கடந்த செப்டம்பர் 11ம் தேதி அம்மாநில போக்குவரத்து துறை சார்பில் ஆன்லைனில் அபராதம் செலுத்த சலான் அனுப்பப்பட்டது..

    அந்த சலானில் அபராதம் விதித்ததற்கான காரணத்தை கண்டு நிரன்கர் சிங் அதிர்ச்சி அடைந்தார். அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பஸ் டிரைவர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பஸ் ஓட்டியதாகவும், அதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

    இதுகுறித்து நிரன்கர் சிங் கூறுகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மீது தவறு இருந்தால் அபராதம் செலுத்த தயார். ஆனால் போக்குவரத்து துறையின் இந்த பொறுப்பற்ற செயல்களால் தினமும் நூற்றுக்கணக்கான சலான்கள் விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

    ஹெல்மெட் அணியாததால் பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நொய்டாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
    Next Story
    ×