search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    கிரைண்டர், உலர்ந்த புளி உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு

    கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், வெட் கிரைண்டர், உலர்ந்த புளி உள்ளிட்ட சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளார்.
    கோவா:

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் கோவா மாநிலத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள், வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தையடுத்து முதலீடு மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது.  

    இந்நிலையில், ஜிஎஸ்டி கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பொருட்கள் மீது மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி  விவரங்கள்:

    வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் இருந்து 5% ஆக குறைப்பு. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உலர்ந்த புளிக்கு விதிக்கப்பட்டுவந்த 5% ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கம்.

    ஹோட்டல் அறையின் தினவாடகை ரூ.1000-க்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் ரூ. 1001 முதல் ரூ.7500 வரை விதிக்கப்படும் தின வாடகை ஹோட்டல்களுக்கு 12% விதிக்கப்படும். மேலும், ரூ.7501 முதல் அதற்கு அதிகமாக தின வாடகை வசூலிக்கப்படும் ஹோட்டல்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×