search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் யாதவ் - யோகி ஆதித்யநாத்
    X
    அகிலேஷ் யாதவ் - யோகி ஆதித்யநாத்

    என்.ஆர்.சி. அமல்படுத்தப்பட்டால் யோகி ஆதித்யநாத் உ.பி.யை விட்டு வெளியேற வேண்டும் - அகிலேஷ் எச்சரிக்கை

    உத்தர பிரதேசத்தில் தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்பட்டால் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியலில் இருந்து 19  லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
    இதனால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செய்யப்பட்டது போன்று உத்தர பிரதேசம் உள்பட நாட்டின் பிற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற வேண்டும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதன்மூலம் வங்காளதேசம் போன்ற நாடுகள் மட்டுமல்லாமல் பிற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கி இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க உதவும் என தெரிவித்திருந்தார்.

    கோப்பு படம்

    இந்நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துளார். 

    இதுதொடர்பாக, தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அகிலேஷ் கூறுகையில், " தேசிய குடிமக்கள் பதிவேடு பொதுமக்கள் மத்தியில் பயத்தை உருவாக்குகிறது. இந்த விவகாரத்தில் மக்களிடையே பிளவை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் ஈட்ட மத்திய அரசு முயல்கிறது. ஒருவேளை தேசிய குடிமக்கள் பதிவேடு  இங்கு அமல்படுத்தப்பட்டால் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முதல் நபராக உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாநிலம் உத்தரகாண்ட் ஆகும்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×