search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈசுவரப்பா
    X
    ஈசுவரப்பா

    முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை: ஈசுவரப்பா

    முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை என்று ஈசுவரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா ஹாவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை விமர்சித்தால், பிரபலமாகிவிடலாம் என்று நினைப்பது தவறு. தேர்தலில் தோல்வி அடைந்து முதல்-மந்திரி பதவியை சித்தராமையா இழந்துவிட்டார். இவ்வளவு ஆன பிறகும் அவர் திருந்தவில்லை. எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சித்தராமையா தரக்குறைவாக விமர்சிக்கிறார். இதற்கு உரிய பதில் அளிக்காமல் என்னால் இருக்க முடியாது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை என்று மக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர்.

    காங்கிரசும் இருக்கிறது என்பதை வெளிக்காட்டவே அக்கட்சியினர் அரசியல் உள்நோக்கத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். வெள்ள சேதங்களுக்கு மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்கும். சட்டசபைக்கு எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே தேர்தல் வராது. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைய வேண்டும் என்று மக்கள் விரும்பினர்.

    சித்தராமையா

    ஆனால் கடந்த ஆண்டு(2018) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மையை வழங்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கல் தீர்ந்து, தற்போது மக்களின் விருப்பப்படி பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது.

    ஒருவேளை சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால், பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் கட்சியில் பூத் மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவினர் ராணுவ வீரர்களை போல் சிறப்பான முறையில் செயல்பட்டு கட்சியை கட்டமைத்து வருகிறார்கள்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். 
    Next Story
    ×