search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    காஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்குவோம்- நாசிக்கில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து மோடி பேச்சு

    மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.
    நாசிக்:

    மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியுடன் நிறைவடைவதால், அங்கு அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாசிக்கில் இன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    மக்களவைத் தேர்தலின்போது நான் இங்கு வந்து பிரச்சாரம் செய்தபோது, வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்துவேன் என நான் கூறினேன். அதன்படி குறித்த காலத்திற்குள் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்போம்.

    மோடியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள்

    மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பட்னாவிஸ் நிலையான அரசை கொடுத்துள்ளார். அவர் இளைஞர்களின் அடையாள சின்னமாக திகழ்கிறார். அவர் மீண்டும் முதல்வராக நாற்காலியில் அமர மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் வன்முறையைத் தூண்டுவதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் நீண்ட கால வன்முறையிலிருந்து வெளியே வர முன்வந்துள்ளனர். வளர்ச்சி மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அவர்கள் விரும்புகிறார்கள்.

    ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்து அம்மாநிலத்தில் புதிய சொர்க்கத்தை உருவாக்க இருக்கிறோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள பிரச்சினைகளைத் தடுக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தோம். அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான பாதையில் நாடு பயணிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த இரண்டு மூன்று வாரங்களாக, ராமர் கோவில் தொடர்பாக சிலர் முட்டாள்தனமாக பேசத் தொடங்கி உள்ளனர். உச்ச நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீதிமன்றம் உன்னிப்பாக கேட்கிறது. நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×