search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    அடுத்த மாதம் 14-ந்தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது

    கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவிக்கு பதிலாக பெங்களூருவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடத்துவது என மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் உள்ள பெலகாவி மாவட்டம் மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ளது.

    இந்த மாவட்டத்தின் சில பகுதிகளை மராட்டிய மாநிலம் இன்னும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, கடந்த 2006-ம் ஆண்டு முதல் முறையாக பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அங்கு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை பெங்களூருவில் நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை அங்கு கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் கஷ்டத்தில் சிக்கியுள்ளதால், பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது கடினம் என்று அந்த மாவட்ட கலெக்டர் கூறினார்.

    எடியூரப்பாவும் நேற்று (நேற்று முன்தினம்), பெலகாவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கஷ்டத்தில் இருப்பதால், பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்த இயலாது என்று கூறினார். இதையடுத்து கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது.

    இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 14-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடை பெறும். இந்த கூட்டத்தொடரில் 90 சதவீதம் முந்தைய குமாரசாமி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்படும். கூடுதலாக சில திட்டங்கள் சேர்க்கப்படும். வெள்ள பாதிப்புகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார். 
    Next Story
    ×