search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல்
    X
    மின்னல்

    பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 18 பேர் பலி

    பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சீசனில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. நேற்று முதல் பரவலாக இடி மின்னலுடன் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில், இடி மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. கயா, கைமூர் மாவட்டங்களில் தலா 3 பேரும், பாட்னா, போஜ்பூர், கிழக்கு சம்பரன், சிவான், அர்வால்  மாவட்டங்களில்  தலா 2 பேரும், கத்திஹார், ஜெகனாபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.‘

    பீகாரில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. பெரும்பாலான பகுதிகளில் பருவமழை கொட்டித்  தீர்த்த நிலையில், சில மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. 18 மாவட்டங்களில் உள்ள 102 தாலுகாக்களில் சிறப்பு நிவாரண உதவி தேவை என மாநில அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.
    Next Story
    ×