search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் சட்டம் 370ஐ சித்தரிக்கும் வகையிலான கேக்
    X
    அரசியல் சட்டம் 370ஐ சித்தரிக்கும் வகையிலான கேக்

    மோடி பிறந்தநாள் விழா கேக்கில் காஷ்மீர் அரசியல் சட்டம் 370

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காஷ்மீர் அரசியல் சட்டம் 370 நீக்கப்பட்டதை சித்தரிக்கும் வகையிலான கேக்கை பாஜகவினர் வெட்டி கொண்டாடினர்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெறும் பிரதமர், தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14 ஆம் தேதி முதல் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர்.

    பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரதமர் மோடிக்கு மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள் அவர் தலைமையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டி பதிவு செய்கின்றனர்.

    இந்தியா கேட் பகுதியில் மோடியின் பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்

    குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் பாஜக எம்பி மனோஜ் திவாரி தலைமையில் பாஜகவினர் மோடியின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். இதற்காக சாதாரண கேக் மற்றும் மிகப்பெரிய லட்டு வடிவிலான கேக் கொண்டு வந்தனர்.

    அந்த கேக்கில், காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவான 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் மிகப்பெரிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பின்னர், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அந்த கேக்கை வெட்டி கொடுத்தனர்.

    சூரத்தைச் சேர்ந்த ஒரு பேக்கரி நிறுவனம், சுமார் 7000 கிலோ எடையில், 700 அடி நீள கேக் வெட்டி மோடியின் பிறந்தநாளை கொண்டாட உள்ளது. மேலும், 370 பள்ளிகளில் படிக்கும் 12000 குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க உள்ளது. 
    Next Story
    ×