search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி

    பல மொழிகள் இருப்பதால் இந்தியா ஒன்றும் பலவீனமான நாடு இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான அமித் ஷா கடந்த 14-ம் தேதி  வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நாட்டின் தேசிய மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளி நாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும்" என்று கூறி இருந்தார்.

    அமித் ஷா-வின் இந்த கருத்து தென் மாநில அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா தனது கருத்தை திரும்ப பெற வேண்டுமென கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகிறது.

    கோப்பு படம்

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரியா, மராத்தி, கன்னடம், இந்தி, தமிழ், வங்காளம், உருது, பஞ்சாபி, கொங்கனி, மலையாளம், தெலுங்கு, அசாமி, போடோ, டோக்ரி , மைதிலி, நேபாளி, சமஸ்கிருதம், காஷ்மீரி, சிந்து, சந்தளி, மணிப்பூரி என பல மொழிகள் உள்ளது. பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×