search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    காஷ்மீர் விவகாரத்தில் தேர்தல் ஆதாயம் தேடுகிறார் சரத் பவார் -பட்னாவிஸ் தாக்கு

    காஷ்மீர் விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தேர்தல் ஆதாயம் தேடுகிறார் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
    சத்தாரா:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் தனித்து போட்டியிட்டன.

    அம்மாநிலத்தில் மொத்தமுள்ள  இடங்களில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி அமைத்து இருகட்சிகளும் ஆட்சி நடத்தி வருகின்றன.

    அங்கு தற்போது ஆளும் பாஜக- சிவசேனா கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதேபோன்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன.

    இரு அணியிலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  சத்தாராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:

    சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் முடிவு எட்டப்படும். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இதில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பிருதிவிராஜ் சவானின் நிலைப்பாடு என்னவென்பதையும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    சரத் பவார்

    ஏனெனில் அவர்களின் கூட்டணி கட்சித் தலைவர் சரத் பவாரின் நிலைப்பாடு வேறாக உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் அங்கு பயங்கரவாதம் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

    சரத் பவாரைப்போன்ற மூத்த தலைவர்கள் தங்களின் கருத்துக்களில் கவனமாக இருக்க வேண்டாமா? ஒரு கருத்து, பாகிஸ்தானுக்கா? இல்லை இந்தியாவுக்கா? யாருக்கு ஆதாயம் தேடித்தரும் என்பதில் அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?. இதுபோன்ற கருத்துக்களை தேர்தல் ஆதாயத்துக்காகவே சரத் பவார் பேசியிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×