search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன் பட்நாயக்
    X
    நவீன் பட்நாயக்

    மக்களுக்காக பணியாற்றாவிட்டால் ஒழித்து விடுவேன் - ஒடிசா முதல் மந்திரி அதிரடி

    போலீசார் மக்களுக்காக செயல்படுகிறீர்களா? என போனில் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி எச்சரித்துள்ளார்.
    புவனேஸ்வர்:

    காந்தி ஜெயந்தியை ஒட்டி அக்டோபர் 2-ம் தேதி ' மோ சர்கார் அல்லது எனது அரசு’ என்ற திட்டதை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த திட்டத்தின்படி காவல் நிலையம் சென்று புகார் அளிக்கும் பொது மக்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். 

    இதன் மூலம் புகாரை விசாரிக்கும் போலீசார் மற்றும் புகார் அளித்தவரின் விவரம் பதிவு செய்யப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களின் கருத்துக்கள்  'மோ சர்கார்' ஆப் மூலம் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். 

    பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறார்கள்? என கண்காணிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்நிலையில், காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட உள்ள ‘எனது அரசு’ திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் இன்று நடைபெற்றது.

    போலீசாருடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பட்நாயக்

    இதில் முதல் மந்திரி பட்நாயக் மாநிலத்தில் உள்ள 635 காவல் நிலைய அதிகாரிகளிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ''நாம் பொது மக்களின் வரி பணத்தில் தான் அரசை நடத்தி வருகிறோம். அதனால் அவர்கள் கொடுக்கும் புகார்களை சிறந்த முறையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக 'எனது அரசு’ திட்டத்தில் கருத்து தெரிவிக்கும் பொதுமக்களிடம் ஒரு நாளைக்கு 10 அழைப்புகள் விகிதம் நான் நேரடியாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்வேன். 

    அப்போது போலீஸ் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என தெரிந்தால் பாராட்டுகள் கிடைக்கும். ஒருவேளை பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு போலீசார் அலட்சியம் காட்டுவதாக தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
    Next Story
    ×