search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரவி
    X
    கர்நாடக மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரவி

    மகாராஷ்டிராவை தொடர்ந்து காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடகா அரசும் முடிவு

    காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிரா மாநிலம் முடிவு செய்த நிலையில் கர்நாடகா அரசும் அங்கு நிலம் வாங்கி சுற்றுலா தலம் அமைக்க முடிவு செய்துள்ளது.
    பெங்களூரு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அம்மாநிலம் லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் நிலம் வாங்க இருந்த தடை நீங்கியது.

    இதையடுத்து மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு காஷ்மீரில் நிலம் வாங்க முடிவு செய்து, 2 சுற்றுலா தலங்கள் கட்ட அமைச்சரவை ஒப்புதலையும் பெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக அரசும் நிலம் வாங்க முடிவு செய்துள்ளது.

    இது குறித்து கர்நாடக மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரவி கூறுகையில், ‘காஷ்மீரில் சுற்றுலா தலம் அமைக்க நிலம் வாங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவையில் வைக்க இருக்கிறோம்.

    இதற்கு முறையான அனுமதி கிடைத்தபின்னர் மாநில அரசுக்கும், ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கும் கடிதம் எழுத உள்ளோம்’ என கூறியுள்ளார்.
        

     
    Next Story
    ×