search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்
    X
    முன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்

    74-வது பிறந்தநாளின் போது திகார் சிறையில் ப.சிதம்பரம்

    மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது 74-வது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் 14 நாள் நீதிமன்ற காவலில் கடந்த 5-ந்தேதி முதல் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 14 நாள் சி.பி.ஐ. காவல் முடிவடைந்து வருகிற 19-ந்தேதி அவர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

    இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்க கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தனிக்கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த மனு மீதான விசாரணை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ப.சிதம்பரத்துக்கு வருகிற 16-ந்தேதி 73 வயது முடிவடைந்து 74-வது வயது பிறக்கிறது. அவர் தனது பிறந்த நாளில் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×