search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    ஐதராபாத்தில் டெங்கு காய்ச்சலால் 100 பேர் பாதிப்பு

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஐதராபாத்:

    காய்ச்சல் அறிகுறியுடன் தினமும் பலர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தினமும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 10 நாட்களில் உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரியில் 100 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல பஞ்சஹரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கட்சிபவ்லி ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கடந்த ஒரு மாதத்தில் 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று உளளனர்.

    இதேபோல நிஜாம் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் தினமும் 10 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஐதராபாத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது தினமும் 1500 பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். இதில் 300 முதல் 400 பேர் வரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 40 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது என்றார்.

    டெங்கு காய்ச்சலுக்கு தினமும் பலர் பாதிக்கப்படுவதால் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் பலருக்கு வராண்டாவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×