search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜக்கி வாசுதேவ்
    X
    ஜக்கி வாசுதேவ்

    மக்கள் தொகை பெருக்கம் மிகப்பெரிய சவால் - ஜக்கி வாசுதேவ்

    மக்கள் தொகை பெருக்கம் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக டெல்லியில் நடந்த மாநாட்டில் ஜக்கி வாசுதேவ் பேசினார்.
    புதுடெல்லி:

    ஐ.நா.வின் பாலைவனமாதலை தடுக்கும் கூட்டமைப்பின் 14-வது உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 2-ந்தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. நேற்று நிகழ்வில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பங்கேற்று, ‘ஒரு மதிப்பான அணுகுமுறை’ என்ற தலைப்பில் முதன்மை பேச்சாளராக உரையாற்றினார்.

    அப்போது ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-

    உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மனிதர்களுக்கு சேவையாற்றுவதற்காவே படைக்கப்பட்டுள்ளன என்று கருதுவது மிகவும் ஆபத்தான அழிவுக்குரிய சிந்தனையாகும். இது தான் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கெல்லாம் அடிப்படை காரணமாக உள்ளது. சூழலியல் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏராளமான சவால்கள் இருப்பதாக நாம் நினைக்கலாம்.

    ஆனால், எதார்த்தத்தில் மக்கள் தொகை பெருக்கம் தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. நாம் நல்லவர்கள் தான். ஆனால் நாம் அதிகமாக இருக்கிறோம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம். இதை நாம் செய்யாவிட்டால் இயற்கையே மிகவும் கொடூரமான வழியில் இதை நிகழ்த்தும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை தொடங்கிய ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகிறார். கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் இருந்து கடந்த 3-ந்தேதி தொடங்கிய பேரணி 8-ந்தேதியன்று பெங்களூரு வந்தடைந்தது.

    இதற்கிடையே டெல்லியில் நடந்த ஐ.நா. பாலைவனமாதலை தடுக்கும் உச்சி மாநாட்டில் ஜக்கி வாசுதேவ் பங்கேற்றதால் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிள் பேரணியில் அவர் பங்கேற்கவில்லை.

    ஜக்கி வாசுதேவ் இன்று (புதன்கிழமை) முதல் தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணியை தொடருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×