search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    பாஜக அரசு 100 நாட்களில் செய்தது என்ன? -நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்

    மத்திய பாஜக அரசின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அப்போது அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சி எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
    சென்னை:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது என்ன? மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:-

    மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 5 லட்சம் கோடி பொருளாளார வளர்ச்சியை அடைய சிறிய வங்கிகள் இணைப்பு உதவும். வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வரும் தேதி குறித்து அந்தந்த வங்கி வாரியம் முடிவு செய்யும்.

    ஜம்மு-காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370  ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு உபயோகமாக இல்லை. 370வது சட்டப்பிரிவை நீக்குவது என்பது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் கூறியதுதான். சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது ஜனசங்க காலம் முதல் எங்களது கொள்கையாக இருந்து வந்ததுதான். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். அந்த சட்டத்தை  நீக்கியதால்  ஜம்மு காஷ்மீரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல மாநிலங்களில் இருந்து முதலீடு பெருகும்.

    பாஜக ஆட்சியில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக நிதி உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தவிர, ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

    ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிவு

    ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை அடுத்த காலாண்டில் உயர்த்துவதில் அரசு முழு கவனம் செலுத்துகிறது. ஜிஎஸ்டி வருவாய் வசூல் குறித்து கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம். மேலும் நமது நோக்கம் மற்றும் பணியை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

    வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அதிகாரிகள் பொருளாதார துறையினருடன் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×