search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்சலெட்
    X
    ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்சலெட்

    காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் - ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

    இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்க வேண்டும். அசாமில் யாரும் நாடிழந்தவர்களாகி விடக்கூடாது என ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
    ஜெனிவா:

    சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்சலெட், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்க வேண்டும்’ என சுட்டிக் காட்டினார்.

    இன்றைய கூட்டத்தில் மிச்சேல் பேச்சலெட் பேசியதாவது:-

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தொடர்ந்து எங்களுக்கு புகார்கள் வருகின்றன.

    காஷ்மீரில் உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாகவும், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கப்பட்டு, காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய அரசு நடந்து கொள்வது குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

    இன்றைய கூட்டத்தில் மிச்சேல் பேச்சலெட்

    அடிப்படை சேவைகளை மக்கள் பெறும் வகையில் காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் தடைகளை விலக்கிக் கொள்ளுமாறு நான் இந்திய அரசிடம் தெரிவித்திருக்கிறேன். மேலும், அங்கு காவலில் வைத்திருப்பவர்கள் தொடர்பாக அனைத்து உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளேன்.

    காஷ்மீரில் வாழும் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக அவர்களையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

    இந்திய அரசால் அசாம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட குடியுரிமை கணக்கெடுப்பு பட்டியலில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதால் அங்கு நிலவும் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்.

    அங்குள்ள மக்களில் யாரும் நாடற்றவர்கள் என்ற நிலை உருவாகாமல் இருக்க அவர்களை நாடு கடத்துவது, காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பான மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறுவதற்கு இந்திய அரசால் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×