search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    Article 370 தாளி
    X
    Article 370 தாளி

    டெல்லி ஓட்டலில் ‘Article 370 தாளி’ உணவு -காஷ்மீர் மக்களை வரவேற்க ஏற்பாடு

    காஷ்மீர் மக்களை வரவேற்கும் விதத்தில் டெல்லி ஓட்டலில் வித்தியாசமாக ‘Article 370 தாளி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புது டெல்லி:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மேலும் லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    இதையடுத்து காஷ்மீரில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் உள்ள ஆர்டோர் 2.1 என்ற பிரபல ஓட்டல், ‘Article 370 தாளி’ என்ற பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த ‘Article 370 தாளி’ ரூ.2,370 (சைவம்), ரூ.2,669 (அசைவம்) என்று 2 வகைகளில் வழங்கப்படுகிறது. காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தால், அரசு அடையாள அட்டை ஒன்றை காட்டினால் இந்த விலையில் ரூ.370 குறைக்கப்படும்.

    Article 370 தாளி

    சைவ தாளியில் காஷ்மீர் புலாவ்  உள்ளிட்ட பல உணவு வகைகள் வழங்கப்படும். அசைவமாக இருந்தால் சைவ உணவுகளுடன் காஷ்மீர் ஆட்டுக்கறியும் சேர்த்து வழங்கப்படும். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் சுவ்வெட் கல்ரா கூறியதாவது:

    நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த நாடு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும், மிகப்பெரிய குடும்பமாக இருப்பதற்கும் எங்கள் ஓட்டலின் பங்களிப்புதான் ‘Article 370 தாளி’.

    மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஒவ்வொரு ‘Article 370 தாளி’க்கும் நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ரூ.170 காஷ்மீர் நிவாரண நிதிக்கு வழங்குவோம். மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த உணவை அறிமுகம் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×