search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா செடிகளை நக்சல் தடுப்பு போலீசார் அழிக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.
    X
    கஞ்சா செடிகளை நக்சல் தடுப்பு போலீசார் அழிக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.

    பாலக்காடு அருகே பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழித்த நக்சல் தடுப்பு போலீசார்

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை நக்சல் தடுப்பு போலீசார் அழித்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:L

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி அகளியில் கோட்டியார்க்கண்டி என்ற மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் சம்பவத்தன்று போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதிகளில் 4 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் அடர்த்தியாக வளர்ந்து காணப்பட்டன. மலைப்பகுதிகளில் கஞ்சா செடி இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இங்கு பயிரிடப்பட்டுள்ள கஞ்சா செடிகளின் சந்தை மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த மலைப்பகுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி நவநீத் சர்மா கூறியதாவது:

    கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு சப்ளை செய்வதற்காக இங்கு கஞ்சா செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இங்கிருந்து தான் பலபகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் உள்ளது. எனவே அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். 

    Next Story
    ×