search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆர்வம், அர்ப்பணிப்பு இந்தியர்களுக்கான உத்வேகம் -ராகுல் காந்தி

    சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் தொடர்பு இழந்ததையடுத்து, இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    இன்று அதிகாலை 1.30 மணிக்கு சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.

    400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.



    இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நிலவை ஆராயும் சந்திரயான் 2 விண்கலத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பமுடியாத உழைப்பை கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.  

    ஒவ்வொரு இந்தியருக்கும் உங்கள் ஆர்வம், அர்ப்பணிப்பு உத்வேகமான ஒன்றாகும். உங்கள் பணி வீணாவதே இல்லை. இது இன்னும் பல பாதைகளை தகர்த்து எறியும். லட்சிய இந்திய விண்வெளி பயணங்களுக்கு அடித்தளத்தையும் இது அமைத்துள்ளது’ என இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×