search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி இன்று மும்பை வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

    மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பை வருகிறார். இதையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    மும்பை:

    மும்பை பெருநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதில், 10-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் தானே- காய்முக்- சிவாஜி சவுக் இடையே 11 கி.மீ. தூரத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிலும், 11-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் வடலா- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையே சுரங்கமார்க்கமாக 14 கி.மீ. தூரத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவிலும், 12-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் கல்யாண்- நவிமும்பை தலோஜா இடையே 25 கி.மீ. தூரத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவிலும் செயல்படுத்தப்பட உள்ளன.

    இந்த மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் அண்மையில் மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    மும்பை மெட்ரோ

    இதைத்தொடர்ந்து 10, 11 மற்றும் 12-வது மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பூமி பூஜை இன்று (சனிக்கிழமை) மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள மாநாட்டு மையத்தில் நடக்கிறது.

    இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மேற்படி மெட்ரோ ரெயில் திட்டங்கள் மற்றும் மும்பையில் அமையும் மெட்ரோ ரெயில் பவன் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியையும் பார்வைக்கு திறந்து வைக்கிறார். மேலும் அந்தேரி கிழக்கு- தசிசர் கிழக்கு மெட்ரோ வழித்தடத்தில் அமைக்கப்பட்டு உள்ள பான்டோங்கிரி மெட்ரோ ரெயில் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

    இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது.
    Next Story
    ×