search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடி
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடி

    ஆசிரியர் தினம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

    நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
    புது டெல்லி:

    நாம், வாழ்வில் முன்னேற உறுதுணையாய் இருப்பவர்கள் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அந்நாள், விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

    இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியரான அவரது பிறந்தநாளை நண்பர்களும் மாணவர்களும்  கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.



    இதனையடுத்து செப்டம்பர் 5(இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆசிரியர் தினமான இன்று, என் அஞ்சலியை டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்துகிறேன் மற்றும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கனவையும், அறிவினையும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பெற அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். இதனை இளைய சமூகத்தின் எண்ணத்தில் ஆசிரியர்கள் உட்செலுத்துகின்றனர். இதன் மூலம் இந்த நாட்டை கட்டமைக்க அவர்கள் பெரிதும் உதவுகின்றனர்.



    இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். தனித்துவமிக்க ஆசிரியர், சிறந்த வழிகாட்டியாக திகழும் டாக்டர்.ராதா கிருஷ்ணன் பிறந்த இந்நாளில் இந்தியா தன் மரியாதையை அவருக்கு செலுத்துகிறது. 
    Next Story
    ×