search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம் விதிக்கப்பட்ட நபர்
    X
    அபராதம் விதிக்கப்பட்ட நபர்

    சாலை விதிமீறல்: 3 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.73 ஆயிரத்து 400 அபராதம்

    ஹரியானாவில் சாலை விதிகளை மீறியதாக மூன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் 73 ஆயிரத்து 400 ரூபாயை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.
    சண்டிகர்:    

    நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

    மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போதைய அபராத தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

    குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டுவந்த ரூ.2 ஆயிரம் அபராதம் இனி ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 அபராதமானாது, ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

    சாலை விதிமீறலில் அபராதம் விதிக்கப்பட்ட நபர்

    இந்நிலையில், ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் சாலை விதிகளை மீறிய மூன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மொத்தம் 73 ஆயிரத்து 400 ரூபாயை (9400, 27000 மற்றும் 37000) போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 

    இந்த அபராதம் விதிக்கப்பட்டதற்கான ரசீதும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசாரால் வழங்கப்பட்டது.
    Next Story
    ×