search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா செல்லும் பிரதமர் மோடி
    X
    ரஷியா செல்லும் பிரதமர் மோடி

    கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

    கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்றிரவு தனி விமானம் மூலம் ரஷியா புறப்பட்டு சென்றார்.
    புதுடெல்லி:

    ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு 2015 முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமைப்பு ரஷியாவில் உலக நாடுகளின் முதலீட்டை ஈர்க்கும் முக்கிய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான மாநாடு செப்டம்பர் 4 முதல் 6 தேதி வரை நடைபெற உள்ளது. 

    கிர்கிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி - கோப்புக்காட்சி

    இந்நிலையில், கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியா புறப்பட்டு சென்றார். ரஷியாவில் அந்நாட்டு அதிபர் புதினை சந்திக்கும் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான புதிய ஓப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×