search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிவுரையுடன் சாக்லேட்
    X
    அறிவுரையுடன் சாக்லேட்

    ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு சாக்லேட் - மணிப்பூர் போலீசாரின் கட்டிப்பிடி வைத்தியம்

    மணிப்பூர் மாநில போலீசார் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சற்று தூரம் தள்ளவைத்து பின்னர் சாக்லேட் கொடுத்து எச்சரித்து அனுப்புகின்றனர்.
    இம்பால்:

    மணிப்பூர் மாநில போலீசார் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சற்று தூரம் தள்ளவைத்து பின்னர் சாக்லேட் கொடுத்து எச்சரித்து அனுப்புகின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ என்னும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வேளையில் விபத்தில் சிக்குவதால் நாடு முழுவதும் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகிறது.

    நீதிமன்றங்களும் போக்குவரத்து போலீசாரும் எவ்வளவுதான் வலியுறுத்தி, அறிவுறுத்தினாலும் யானை வாங்க தெரிந்தவர்கள் அங்குசம் வாங்க மறுப்பதுபோல், இருசக்கர வாகன ஓட்டிகள் இதைப்பற்றி அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை.

    இவர்களை வழிக்கு கொண்டுவர சில மாநில அரசுகள் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதித்து வருகின்றன.

    சூப்பிரண்ட் அம்ரிதா

    இந்நிலையில், மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சற்று தூரம் தள்ளவைத்து பின்னர் ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி அறிவுறுத்துவதுடன் சாக்லேட் கொடுத்து எச்சரித்து அனுப்புகின்றனர்.

    அம்மாவட்ட போக்குவரத்து காவல்துறையின் பெண் சூப்பிரண்ட் அம்ரிதா சின்ஹா ஏற்பாட்டின் பேரில் நடைபெற்று வரும் இந்த ‘கட்டிப்பிடி வைத்தியம்’ நாளுக்குநாள் நல்ல பலனை அளித்து வருவதாக மணிப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த புதிய முயற்சி தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த  சூப்பிரண்ட் அம்ரிதா சின்ஹா, ‘அபராதம் விதிப்பதால் எந்த மாற்றமும் வந்து விடப்போவதில்லை. மாறாக, ஹெல்மெட் அணிவது தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் என்பதை வாகன ஓட்டிகள் உணரத் தொடங்கியுள்ளனர். எங்களது இந்த நடவடிக்கையின் மூலம் நிச்சயமாக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.
    Next Story
    ×