search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச பொதுமன்னிப்பு சபை
    X
    சர்வதேச பொதுமன்னிப்பு சபை

    தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல்- சர்வதேச பொதுமன்னிப்பு சபை கவலை

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல் தொடர்பாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை கவலை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள், பெயர்களை சேர்ப்பதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

    தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் முறையிடலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 100ல் இருந்து 300 ஆக அதிகரித்திருப்பதாகவும், இந்த தீர்ப்பாயங்கள் திங்கட்கிழமை முதல் செயல்படத் தொடங்கும் என்றும் அசாம் மந்திரி சந்திர மோகன் பதோவரி கூறியுள்ளார்.

    என்ஆர்சி பட்டியலில் பெயரை சரிபார்க்க காத்திருக்கும் மக்கள்

    இந்நிலையில், என்ஆர்சி விவகாரம் தொடர்பாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் இந்தியாவிற்கான தலைவர் அக்தர் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள வெளிநாட்டு தீர்ப்பாயங்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்ததுடன், அவை வெளிப்படையாக செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ‘வெளிநாட்டு தீர்ப்பாயங்களின் நடைமுறைகள் தன்னிச்சையானது என்பதையும், அதன் தீர்ப்புகள் பாரபட்சமாக இருந்ததையும் பல்வேறு அறிக்கைகள் விளக்கி உள்ளன. எனவே, இந்த தீர்ப்பாயங்கள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நியாயமாக செயல்பட வேண்டும்’ என்றும் அக்தர் பட்டேல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×