search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    டெல்லி விமான நிலையத்தில் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் கடத்த முயன்ற வெளிநாட்டவர்கள் கைது

    டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை கடத்த முயன்ற தைவான் நாட்டினர் 5 பேரை வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.







    புதுடெல்லி:



    டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் கடந்த புதன்கிழமை ஹாங்காங் செல்வதற்கான விமானத்திற்கு பயணிகள் காத்திருந்தனர். அதில் தைவான் நாட்டைச் சேர்ந்த 5 பயணிகள் மீது சந்தேகம் எழுந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை
    விசாரித்து அவர்களது உடைமைகளை முழு சோதனை செய்தனர்.

    சோதனையில் அவர்களது பெட்டியில் 4,49,600 அமெரிக்க டாலர்கள் இருந்ததை கண்டுபிடித்தனர், அவற்றின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3 கோடியே 25 லட்சம் ஆகும்.

    உடனடியாக அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து தங்கங்களை கடத்தி வந்து, இங்கிருந்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி செல்லும் மிகப்பெரிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    இதையடுத்து கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்ட அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது குறித்து சுங்க அதிகாரிகள் கூறுகையில், ‘இம்மாதிரியான கடத்தல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இம்மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட 35 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4058 கிலோ தங்கமும், 164 கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன. நடப்பு ஆண்டிலும் 79 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவித்தனர்.
    Next Story
    ×