search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா
    X
    தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா

    ஜிடிபி வீழ்ச்சி: செய்து முடிக்க வேண்டிய பணி நிறைய உள்ளது.. -ஆனந்த் மகேந்திரா

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது என புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கெடுப்பு முடிவு நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில், நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது.

    இது 5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏழு வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது.

    இது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தச் செய்தி என் வெள்ளிக்கிழமையையே பாழாக்கிவிட்டது. என் வார இறுதி நாட்களையும் இது பாதிக்கும்.

    நிர்மலா சீதாராமன்

    செய்து முடிக்க இன்னும் நிறைய பணி இருக்கிறது. ஆனால், எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. வங்கிகள் இணைப்பு தொடர்பான நிர்மலா சீதாராமனின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற ஒரு சீர்திருத்த வாரமே நமக்கு தேவையான டானிக்கை அளிக்கிறது’ என கூறியுள்ளார்.

    முன்னதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகளை இணைக்கப்படும்.

    ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும். இதேபோல், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும். வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும்’ என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.





    Next Story
    ×