search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா மாநிலத்துக்கென தனிக்கொடி அறிமுகப்படுத்திய காட்சி
    X
    கர்நாடகா மாநிலத்துக்கென தனிக்கொடி அறிமுகப்படுத்திய காட்சி

    கட்சிகளுக்கு கொடிகள் இருக்கலாம்.. மாநிலத்துக்கு சாத்தியமில்லை.. -கர்நாடக பாஜக

    கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் முடிவான மாநிலத்துக்கென தனிக்கொடி என்ற முடிவை தற்போதுள்ள கர்நாடகா பாஜக அரசு கைவிடுவதாக முடிவெடுத்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்று கன்னட அமைப்புகள் மற்றும் மாநில மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ஏற்று நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்திற்கு என்று தனிக்கொடி உருவாக்கப்பட்டது.

    கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து கர்நாடகத்திற்கு தனிக்கொடியை பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு வரைவு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த கொடியினை கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது அவரே அறிமுகம் செய்து வைத்தார்.

    மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் நடுவே மாநில அரசின் லோகோவும் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் ஆட்சி மாற்றம் அடுத்தடுத்து நிகழ்ந்தது. இதில் பாஜக கட்சியின் எடியூரப்பா முதல்வரானார்.

    சி.டி. ரவி

    இந்நிலையில் மாநிலத்துக்கென தனிக்கொடி முறை தொடராது என அக்கட்சி தற்போது முடிவு செய்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநில கலாச்சாரத்துறை மந்திரி சி.டி. ரவி கூறுகையில், ‘தேசியக் கொடியை தவிர மூவர்ணங்களில் மற்றொரு கொடியை மாநிலத்திற்கு என்று ஒதுக்க அரசியல் அமைப்பில் இடம் இல்லை.

    அதே சமயம் அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு என தனித்தனியே வெவ்வேறு நிறங்களில் கொடிகள் இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு ரீதியாக மாநிலத்துக்கென தனிக்கொடி எனும் நடைமுறை சாத்தியம் இல்லை. இது தொடர்பாக மத்திய அரசை அணுகுவோம்’ என கூறியுள்ளார்.



    Next Story
    ×