search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திராணி முகர்ஜி
    X
    இந்திராணி முகர்ஜி

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ‘ப.சிதம்பரம் கைதானது நல்ல செய்தி’ - ‘அப்ரூவர்’ இந்திராணி முகர்ஜி பரபரப்பு பேட்டி

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி என்று அப்ரூவர் இந்திராணி முகர்ஜி கூறினார்.
    மும்பை:

    ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரி பதவி வகித்தபோது, மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார்; இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார்; இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என புகார்கள் எழுந்தன.

    ப.சிதம்பரம்


    இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்ட விரோத பண பரிமாற்றம் பற்றி அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

    சி.பி.ஐ. வழக்கில், ப.சிதம்பரம் கடந்த 21-ந் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி, அப்ரூவர் ஆகி உள்ளார். இந்திராணி முகர்ஜி தனது மகள் ‌ஷீனா போரா கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவர் இந்த வழக்கில் கைதாகி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவர் மும்பை தனிக்கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அவர் (ப.சிதம்பரம்) கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி. அவருக்கு இப்போது எல்லா பக்கங்களில் இருந்தும் நெருக்கடி வந்துள்ளது.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×