search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவம்
    X
    எல்லையில் பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவம்

    எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்- இந்திய ராணுவம் பதிலடி

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து கடந்த நான்கு தினங்களாக தாக்குதல் நடத்தியது. நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனையும் நடத்தி உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டம் மெந்தர் செக்டார் எல்லைக் கோட்டில் காலை 11.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். சிறிய ரக ஆயுதங்களாலும் மோர்ட்டார் ரக குண்டுகளாலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சண்டை சிறிது நேரம் நீடித்தது. இதனால் எல்லையோர பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.

    கடந்த 24-ம்தேதி பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×