search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
    X
    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

    நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

    இந்தியா முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்க்கிய முடிவுகள் குறித்து
    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    நிலக்கரி சுரங்கம் மற்றும் அது தொடர்பான நடைமுறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    மேலும், சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்பு உருவாக்குவதற்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.
    Next Story
    ×