search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கி உருக்குலைந்து கிடக்கும் கார் (கோப்பு படம்)
    X
    விபத்தில் சிக்கி உருக்குலைந்து கிடக்கும் கார் (கோப்பு படம்)

    சாலை விபத்துகளில் அசாம் முதலிடம்- கடந்த ஆண்டு மட்டும் 8248 சம்பவம்

    வடகிழக்கு மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் மற்றும் விபத்து பாதிப்புகள் தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வடகிழக்கு மாநிலங்களல் அசாம் மாநிலத்தில்தான் கடந்த ஆண்டு அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அசாமில் கடந்த ஆண்டு மொத்தம் 8248 விபத்துக்கள் நடந்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இந்த விபத்துக்களில் 2966 நபர்கள் உயிரிழந்துள்ளனர்; 7375 நபர்கள் காயமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு சாலை விபத்துக்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ளன.

    அதேசமயம் நாடு முழுதிலும் ஒப்பிடுகையில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் அசாம் மாநிலம் 16-வது இடத்தில் உள்ளது.

    சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்துகொள்ளாமல், வாகனங்களை ஓட்டுவதுதான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். அலட்சியம் மற்றும் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. முறையாக வாகனங்களை ஓட்டியிருந்தால், பெரும்பாலான உயிரிழப்பு மற்றும் காயங்களை தவிர்த்திருக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×