search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீதாராம் யெச்சூரி
    X
    சீதாராம் யெச்சூரி

    சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இம்மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு சில நாட்களாக பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. 

    ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் தொடர்பாக ஆய்வு செய்ய சென்ற இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடந்த அகஸ்ட் 9 தேதி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மறுநாள், தன்னை காஷ்மீருக்கு செல்ல அனுமதிக்காதது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதினார். 

    மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், நண்பருமான யூசுப் தரிகாமியை சந்திப்பதற்காக ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு அனுமதி கோரி சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யெச்சூரியின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், யெச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டனர்.

    “சீதாராம் யெச்சுரி காஷ்மீர் செல்லலாம். அவரது கட்சி நிர்வாகியான யுசுப் தரிகாமியை நண்பராக சந்திக்கலாம். ஆனால் எந்தவொரு அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது. நாட்டு மக்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பாதை அமைத்து தருவது நமது கடமை. நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன்  தொடர்பு கொள்வது அவசியம்” என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    Next Story
    ×