search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரக்யா சிங்
    X
    பிரக்யா சிங்

    எதிர்கட்சிகள் தீய சக்திகளை ஏவியதே பாஜக தலைவர்கள் மறைவுக்கு காரணம் -பிரக்யா சிங்

    பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து இறக்க, எதிர்கட்சிகள் தங்கள் கட்சியின் மீது தீய சக்திகளை ஏவியதுதான் காரணம் என அக்கட்சியின் எம்.பி. பிரக்யா சிங் தாகூர் கூறியுள்ளார்.
    போபால்:

    கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திக் விஜய சிங்கை தோற்கடித்து, பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாகூர் வெற்றிப் பெற்றார்.

    இவர் போபால் தொகுதியின் எம்.பியாக பதவியேற்றது முதலே சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, பின்னர் அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார். சமீபத்தில் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என கூறியிருந்தார். இது மாபெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பாஜக சார்பிலும் கண்டனம் விடுக்கப்பட்டது.

    இதனையடுத்து அது தனது தனிப்பட்ட கருத்து என்றும், யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அருண் ஜெட்லி - சுஷ்மா சுவராஜ் - வாஜ்பாய்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரிகள் மனோகர் பாரிகார், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி என ஓராண்டில் அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் காலமாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த பிரக்யா சிங் கூறுகையில், ‘பாஜக கடுமையான காலத்தை சந்திக்க உள்ளதாக சாது ஒருவர் எனக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    மேலும் எதிர்கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாகவும் கூறினார். அதன்பின்னர் அவர் கூறியதை மறந்துவிட்டேன். ஆனால், இன்று சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, பாபுலால் கவுர் யாதவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து இறந்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த சாது கூறியது உண்மைதான் என தெரிகிறது. அதேபோல், எங்கள் தலைவர்கள் திடீரென மரணமடைந்தனர்’ என கூறினார். 
    Next Story
    ×