search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    காங்கிரஸ் என்னை அடிமை போல நடத்தியது - குமாரசாமி வேதனை

    காங்கிரஸ் என்னை அடிமை போல நடத்தியது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்த அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். அதை தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

    பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களை கொண்ட எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரான தேவகவுடா கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ‘கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி முறிவடைந்து ஆட்சி கவிழ்ந்ததற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாதான் காரணம். எடியூரப்பாவை முதல்வராக்கி, தான் எதிர்க் கட்சி தலைவர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதுதான் சித்தராமையாவின் நோக்கம்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: - ‘நான் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்தேன். காங்கிரஸ் என்னை ஒரு கிளார்க் போல நடத்தினார்கள். எவ்வளவு நாட்களுக்கு அடிமையாகவே இருப்பது? காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் என் முகத்தில் பேப்பர் கட்டை தூக்கி வீசி அவமானப்படுத்தினார்.

    காங்கிரஸ் என்னை எப்படி நடத்தியது என்று எனக்கு தெரியும். நான் அமைதியாகவே இருக்கிறேன். சித்தராமையா எப்படி அரசாங்கத்தை வழிநடத்தினார் என்பதும் எனக்கு தெரியும். அரசியல் என்றாலே வெறுப்பாகி விட்டது. விலகி செல்லவேண்டும் என்று தோன்றினாலும் லட்சக்கணக்கான கட்சி தொண்டர்களுக்காகவே இங்கு இருக்கிறேன்’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×