search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட பீகார் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. மோகமா ஆனந்த் சிங்
    X
    கைது செய்யப்பட்ட பீகார் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. மோகமா ஆனந்த் சிங்

    ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல் விவகாரம் - பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ. சிறையில் அடைப்பு

    பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மோகமா ஆனந்த் சிங். பாட்னா மாவட்டம் லட்மா என்ற கிராமத்தில் உள்ள இவரது பூர்வீக வீட்டில் இருந்து கடந்த 16-ந் தேதி ஏ.கே.47 துப்பாக்கி, கையெறி குண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த வீட்டுக்கு கடந்த 14 ஆண்களாக தான் சென்றதே இல்லை என்று மோகமா ஆனந்த் சிங் கூறினார். மறுநாள் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு வாள், செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மோகமா ஆனந்த் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் 23-ந் தேதி டெல்லியில் உள்ள சாகேத் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்தநிலையில் மோகமா ஆனந்த் சிங்கை டெல்லியில் இருந்து விமானம் மூலம் போலீசார் நேற்று பாட்னாவுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை பார்க் கூடுதல் தலைமை ஜூடிசியல் கோர்ட்டு நீதிபதி பி.கே.திவாரி முன்பு ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி, மோகமா ஆனந்த் சிங்கை வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் பெயூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×