search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்ய பால் மாலிக்
    X
    சத்ய பால் மாலிக்

    மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்

    ஜம்மு-காஷ்மீரில் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று கவர்னர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அதிரடியாக நீக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை காரணமாக முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வெளித்தொடர்பு இல்லாமல் இருக்கின்றனர்.

    இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றனர். ஆனால், அவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். காஷ்மீரில் இன்னும் இயல்வு நிலை திரும்பவில்லை என்று குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மருந்து தட்டுப்பாடோ, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடோ இல்லை என்று கவர்னர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவர்னர் சத்ய பால் மாலிக் கூறுகையில் ‘‘தகவல் தொடர்பு கட்டுப்பாட்டால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டன என்றால், அது தீங்கா?.

    பாதுகாப்பு படையினர்

    எங்களுடைய அணுகுமுறையால் ஒரு உயிர்ச்சேதம் கூட ஏற்படவிலலை. 10 நாட்கள் தொலைத்தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால், அனைத்து வசதிகளும் விரைவில் கிடைக்கும்.

    பக்ரீத் பண்டிகையின் போது இறைச்சி, காய்கறிகள் மற்றும் முட்டைகள் வீடுவீடாக சென்று மக்களுக்கு வினியோகம் செய்தோம். மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை’’ என்றார்.
    Next Story
    ×