search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி
    X
    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி

    காஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்

    காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நான் அவரிடம் விளக்கினேன். காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வதேச சமுதாயத்துக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா. அதிகாரிகள் உறுப்பு நாடுகளுக்கு விளக்கியதற்காக நன்றி தெரிவித்தேன்.

    ஐ.நா. பொதுச் செயலாளரும் பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது பதற்றத்தை தவிர்ப்பது குறித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இவ்வாறு குரேஷி கூறினார்.
    Next Story
    ×