search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    காஷ்மீரில் அமைதி நிலை இல்லை - ராகுல் காந்தி பேட்டி

    ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், காஷ்மீரில் அமைதி நிலை இல்லை என்றார்.
    புதுடெல்லி:

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடைவிதித்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு செல்ல உள்ளோம் என நேற்று தெரிவித்திருந்தனர். ஆனால் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

    இதையடுத்து, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டபடி இன்று மதியம் அவர்கள் டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையம் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பியது.

    இந்நிலையில், காஷ்மீரில் அமைதி நிலை இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திதெரிவித்துள்ளார். 

    கடிதத்தின் நகல்

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், காஷ்மீரில் என்ன நிலவரம் என்பதை நேரில் பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் அங்கு சென்றோம். கவர்னர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்தே நாங்கள் அங்கு சென்றோம். நாங்கள் அழைத்துச் சென்ற ஊடக நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நடந்தவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது காஷ்மீரில் அமைதி நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.

    மேலும், பட்காம் மாவட்ட கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சி குழுவை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளனர். 
    Next Story
    ×