search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.
    X
    திருப்பதியில் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி- திருப்பதி கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    திருமலை:

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் வாகன சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.

    இதே போல் ஆந்திரா மாநிலமான திருப்பதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஏற்கனவே பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

    அச்சுறுத்தலையொட்டி தற்போது சோதனை மேலும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.


    அலிபிரி சோதனை சாவடி, மலை மீது உள்ள என்.எம்.சி. சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாகன ஓட்டிகளிடம் லைசென்ஸ்சுடன், ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே வாகனங்கள் மேலே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

    ஆதார் கார்டு இல்லாத வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையம் முழுவதும் மோப்பநாய் கொண்டும் சோதனை செய்யப்படுகிறது.

    இதேபோல் பஸ் நிலையத்திலும் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×