
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில் இருந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம், விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், அந்த கட்டிடத்தில் வசித்த பொதுமக்களை வெளியேறும்படி கூறினர்.

இதையடுத்து மீட்புக் குழுவினர், கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை நிலவரப்படி 2 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.