search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    வரிவிதிப்புகள் சிலவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் நிதிமந்திரி - வீட்டு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைகிறது

    டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வீடு, வாகன கடன்களின் வட்டி குறைகிறது என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியா பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது என பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வருமான வரி தாக்கல் அதிகரித்துள்ளதால் இந்தியாவில் வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு ஆய்வுகள் நடத்தி துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.

    ஜி.எஸ்.டி. முறையில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். கம்பெனிகள் பலன் பெறும் வகையில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான சட்ட திருத்தங்கள் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள், வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

    எளிய முறையில் வருமான வரி தாக்கல் செய்ய எலக்ட்ரானிக் ஆன்லைன் முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் வருமான வரித்துறையில் குற்றம் இழைத்தவர்களுக்கு ஆன்லைன் மூலமே சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்பப்படும்.

    தொழில் முனைவோருக்கான கடன் பெறும் வழிகள் எளிமைப்படுத்தப்படும். வங்கி மூலம் கடன் பெறுவோர் எளிய முறையில் வங்கிகளை அணுக முடியும். ஆன்லைன் மூலம் கடன் விண்ணப்பிப்போருக்கு விரைவில் கடன் வழங்கப்படுகிறது. கடன் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

    வீடு ,கார் வாங்கும் தவணை குறைக்கப்படும். வங்கிகளுக்கு கூடுதலாக மூல நிதி ரூ. 5 லட்சம் கோடி வழங்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதியில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி உடனடியாக வழங்கப்படும். வங்கிகள் ஒரு முறைக்கு மேல் ஆதாரை கேட்க கூடாது என உத்தரவிட்டு உள்ளோம். ரெப்போ விகித்துடன் கடன் இணைக்கப்படும். வட்டி விகிதங்களை வங்கிகளே மாற்றுவதால் கடனுக்கான வட்டி குறையும். ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை தொடர்பாக 30 நாட்களில் முடிவு செய்ய உத்தரவிட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×