search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய 3 அரசு ஊழியர்கள் கைது

    ராஜஸ்தான் மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய அரசுப்பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பரன் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் முதல்வர் ஜெயவீர் சவுத்ரி மற்றும் சக ஆசிரியர் பைஜ்நாத் ஆகியோர். இவர்கள் மீனா என்பவரிடம் மதிய உணவு திட்டத்திற்கான பில்களை அனுப்ப ரூ .40000 லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.20000 வாங்கியுள்ளார்.  இதையடுத்து மீனா லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இந்நிலையில் அடுத்த தவணையாக ரூ.7000 வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் நேற்று கையும் களவுமாக பிடித்தனர்.

    மேலும் பள்ளியின் பெயரில் முதல்வர் வைத்திருந்த வங்கிக் கணக்கிலிருந்த  ரூ .13 ஆயிரமும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோன்று மற்றொரு இடத்தில் நில பதிவு ஆய்வாளர் ஒருவர் ஆட்சேபனை இல்லை (No Objection Certificate) சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×